என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "விஷம் குடித்து தற்கொலை முயற்சி"
ராஜபாளையம்:
ராஜபாளையம் அருகே உள்ள சொக்கலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துராமு (வயது 54), இவர் இந்த கிராம ஒரு சமுதாயத்தின் நிர்வாகியாக சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்து வந்தார். இவர் மீது கிராம மக்கள் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தியதால் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து கட்டுராக்கன், பாரி, வில்லியாழ்வார் ஆகியோர் நிர்வாகிகளாக இருந்து வருகிற 21-ந் தேதி கோவில் பொங்கல் விழாவை நடத்துவதற்காக ஏற்பாடுகளைச் செய்து வந்தனர்.
இந்த நிலையில் முத்து ராமு கோவிலுக்குள் நுழைந்து உள்ளே பூட்டிக் கொண்டு சேலையால் தூக்கு போடவும், விஷ மருந்து பாட்டிலை கையில் வைத்தும் நிர்வாகிகளை மாற்றவும், ஓட்டுப் போட்டு நிர்வாகிகள் தேர்வு செய்யவும், நிர்வாகிகள் கோவில் திருவிழாவை நடத்தக் கூடாது எனவும் கோரிக்கை வைத்தார்.
தகவல் அறிந்து ராஜபாளையம் தெற்கு இன்ஸ் பெக்டர் சங்கர்கண்ணன், தலைமையில் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். அவர் நடவடிக்கை எடுக்கும் வரை வெளியே வர மாட்டேன் என்று கூறி விட்டதால் வேறு வழியின்றி கோவிலின் பின்பக்க தகரக்கதவை கடப்பாரைக் கம்பியால் உடைத்தனர். உள்ளே நுழைந்து அவரை மீட்டனர். அதற்குள் முத்துராமு கையில் வைத்திருந்த விஷத்தை குடித்து, வாந்தி எடுத்தார்.
இதனால் அவரை அவசரமாக அங்கிருந்த வாகனத்தில் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக தெற்கு போலீசார் முத்துராமு மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால் சொக்கலிங்கபுரம் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம்:
சேலம் மாவட்டம் மல்லூர் அருகே உள்ள அக்கறைபாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் சரண்யா (வயது 12). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் பள்ளிக்கு செல்ல சரண்யா மறுத்ததாக கூறப்படுகிறது. இதனை அவரது தாய் கண்டித்தார். மனம் உடைந்த சரண்யா வீட்டில் இருந்த சாணிபவுடரை கலக்கி குடித்து மயங்கி விழுந்தார்.
இதை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்